தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் வட்டாரத்தில் இடியுடன் கன மழை

கரூர் வட்டாரத்தில் இடியுடன் கன மழை

கரூர் வட்டாரத்தில் இடியுடன் கன மழை


ADDED : ஆக 20, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடியுடன் கூடிய, கன மழை பெய்தது.

தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை, 4:00 முதல், 4:30 மணி வரை கரூர் நகரம், திருமாநிலையூர், பசுபதி

பாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்தி கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இதனால், கரூர்-கோவை சாலை, திருச்சி சாலை தெரசா கார்னர், சுங்ககேட் பகுதிகளில் மழை நீர் சாலையில் ஓடியது. கரூர் தலைமை தபால் நிலையம் முன், மழைநீர் தேங்கி நின்றது. மேலும் ஜவஹர் பஜார், பழைய டவுன் அரசு மருத்துவமனை சாலை, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 1,171 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 1,126 கன அடியாக சரிந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 0.98 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us