ADDED : மார் 14, 2026 04:30 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றில், இரவு நேரங்-களில் சட்ட விரோதமாக, 20க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்துக் கொண்டு, மணல் கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவல் படி, தண்ணீர்பள்ளி வி.ஏ.ஓ., அலிமா, கிராம உதவி-யாளர் குணசுந்தரி நேற்று முன்தினம் மதியம், 1:00 மணியளவில் தண்ணீர்பள்ளி தனியார் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்-பட்ட அசோக் லைலேண்ட் டிப்பர் லாரியில் சோதனை நடத்-தினர்.
அப்போது காவிரி ஆற்று மணல், கடத்தப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழி-யிடம் கேட்டபோது, லாரியை நிறுத்தி விட்டு சென்றவர்கள் யார் என்று தெரியவில்லை என்றார்.
வி.ஏ.ஓ., அலிமா புகார்படி, மணல் கடத்தப்பட்ட டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், உப்பிடமங்கலம் லிங்க நகரை சேர்ந்த பாலசுப்பி-ரமணியன், 45, என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
