/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
/
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
ADDED : செப் 11, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை :குளித்தலை, சுங்ககேட்டில் நேற்று அதிகாலை, எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முசிறி காவிரி பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், சட்டவிரோதமாக, மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பர் லாரி டிரைவரான, கொசூர் பஞ்., கவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 40, வாகன உரிமையாளரான, குளித்தலை வை.புதுாரை சேர்ந்த குமரேசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து, பழனிசாமியை கைது செய்தனர். மேலும், டிப்பர் லாரியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.

