/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செம்மண் கடத்திய டிப்பர் டிராக்டர் பறிமுதல்
/
செம்மண் கடத்திய டிப்பர் டிராக்டர் பறிமுதல்
ADDED : மே 16, 2025 01:24 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, வடசேரி மற்றும் புழுதேரி பஞ்., பகுதிகளில், சட்ட விரோதமாக கிராவல் மண், செம்மண் மற்றும் காட்டாற்று மணல் கடத்துவதாக குளித்தலை சப்-கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த, 13 அதிகாலை தோகைமலை வி.ஏ.ஒ., சதீஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வடசேரி நல்லுசாமி என்பவரது புஞ்சை நிலத்திலிருந்து, அரசு அனுமதியில்லாமல் டிராக்டர் வாகனத்தில் செம்மண் ஏற்றி சென்றது தெரிய வந்தது. வாகனத்தை சோதனை செய்தபோது, ஒரு யூனிட் செம்மண் இருந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்து, தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.