/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிட்டோ- - ஜாக் அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்; 220 ஆசிரியர்கள் கைது

ADDED : ஜூலை 18, 2025 01:49 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற, டிட்டோ- ஜாக் அமைப்பை சேர்ந்த, 220 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான டிட்டோ ஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயசாமி தலைமைவகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார், 220 ஆசிரியர்களை கைது செய்தனர்.போராட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கணேசன், மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் அமுதன், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் வேலுமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.