/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., ஐ.டி.ஐ., விண்ணப்பிக்க அழைப்பு
/
டி.என்.பி.எல்., ஐ.டி.ஐ., விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:24 AM
கரூர், :Lபுகழூரில் உள்ள, டி.என்.பி.எல்., ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம் என, அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. எலக்ட்ரீஷியன், பிட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில், 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவில் ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு முதல் புதிய பாடப்பிரிவு இயக்க உதவியாளர் (காகித கூழ் மற்றும் காகிதம்) துவங்கப்பட்டுள்ளது.
இரண்டாண்டு பயிற்சியில் சேர கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு தேர்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு, 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரம் பெற தொழிற்பயிற்சி நிலையத்தின்-04324 296442 94865 05953 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.