ADDED : மார் 13, 2026 04:16 AM
அ நிறம் | அளவு
கரூர்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், தினமும் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. காகித ஆலையை சுற்றியுள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்பு பாளையம், நஞ்சைப்புகழூர் மற்றும் திருக்காடு-துறை ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடக்கிறது.
இதன்படி, 50-வது கிராமமான பொன்னியாக்கவுண்டன்புதுாரில் நடந்த மருத்துவ முகாமில், 856 பேருக்கு மருத்துவ ஆலோ-சனை, தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் காகித நிறு-வனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 11,030 பேர் முகாமில் பயனடைந்துள்ளனர்.
