/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 10,821 தேர்வர்கள் பங்கேற்பு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 10,821 தேர்வர்கள் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 10,821 தேர்வர்கள் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 10,821 தேர்வர்கள் பங்கேற்பு
ADDED : செப் 13, 2024 06:48 AM
கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் மாவட்டத்தில், 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 2 முதல் நிலை எழுத்துத் தேர்வு நாளை (14ம் தேதி) நடக்கிறது. இதில், 39 மையங்களில் மொத்தம், 10,821 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கூட அனுமதி சீட்டு உள்ள தேர்வர்கள் மட்டுமே, மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 8:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். அதன் பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு முடிவடைந்த பின், தேர்வர்கள் அவர்களது இடது கை பெருவிரல் ரேகை பதிவினை, விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இட வேண்டும். மற்றும் தங்கள் புகைப்பட அடையாளத்திற்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு பேசினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், சப்-கலெக்டர் பிரகாசம், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.