/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு மே 24 முதல் தொடக்கம்
/
டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு மே 24 முதல் தொடக்கம்
டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு மே 24 முதல் தொடக்கம்
டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு மே 24 முதல் தொடக்கம்
ADDED : மே 21, 2025 01:13 AM
கரூர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு, மாதிரி தேர்வு வரும், 24 முதல் நடப்பதால், அதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்பட, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவ மாணவியருக்கு, டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 4 மாதிரி தேர்வுகள் வரும், 24, ஜூன் 2, 9 ஆகிய நாட்களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மாதிரி தேர்வுகள் வரும், 27, ஜூன் 3, 7 ஆகிய நாட்களில் நடக்கிறது.
மாநில அளவில் நடத்தப்படும் மாதிரி தேர்வில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும், 23க்கு முன் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 63830 50010 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.