/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.3.16 லட்சம் மதிப்பு புகையிலை பொருள் பறிமுதல்: இருவர் கைது
/
ரூ.3.16 லட்சம் மதிப்பு புகையிலை பொருள் பறிமுதல்: இருவர் கைது
ரூ.3.16 லட்சம் மதிப்பு புகையிலை பொருள் பறிமுதல்: இருவர் கைது
ரூ.3.16 லட்சம் மதிப்பு புகையிலை பொருள் பறிமுதல்: இருவர் கைது
ADDED : மே 24, 2024 06:48 AM
குளித்தலை : குளித்தலை, தோகைமலை பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின்படி, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவின்பேரில், நேற்று காலை காலை எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார், பரளி ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே டி.வி.எஸ்., மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அடுத்த, பழங்காவேரி கிராமத்தை சேர்ந்த கண்ணன், 64. என தெரியவந்தது. மேலும், கிராமப்புற பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகளில் தின்பண்டங்களை விற்பனை செய்து வந்தார்.மேலும் திருச்சி மாவட்டம், முசிறி மேற்கு தெருவை சேர்ந்த ராஜேஷ், 34, என்ற தக்காளி வியாபாரி புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இவரிடமிருந்து, 316 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு, மூன்று லட்சத்து, 16 ஆயிரம் ரூபாய். இவர்கள் பயன்படுத்தி வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக், டிவிஎஸ் ஹெவி மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.குளித்தலை போலீசார், இருவரையும் கைது செய்தனர்.