/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று மாட்டு பொங்கல் அலங்கார பொருட்கள் விற்பனை
/
இன்று மாட்டு பொங்கல் அலங்கார பொருட்கள் விற்பனை
ADDED : ஜன 15, 2025 12:50 AM
கரூர்,:
மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, கரூரில் பசுக்களை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை நேற்று ஜோராக நடந்தது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், நேற்று முன்தினம் போகியுடன் தொடங்கியது. நேற்று வீடுகளில் சூரிய பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தப்பட்டது. இன்று விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட, கால்நடைகளை குளிப்பாட்டி, பல்வேறு பொருட்களால் விவசாயிகள் அலங்கரிப்பது வழக்கம்.
அதையொட்டி, பல வண்ணங்களில் மூக்காணங்கயிறு, தும்பு கயிறு, மணி சங்கு, திரு காணி, சாட்டைகள், கழுத்து மணி, நெத்தி மணி மற்றும் சாட்டைகள் மதுரை மற்றும் சேலம் செவ்வாய் பேட்டை பகுதிகளில் இருந்து, கரூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கரூர் ஜவஹர் பஜார் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் கால்நடை அலங்கார பொருட்கள், 100 முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி
சென்றனர்.