/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
/
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 04, 2025 01:14 AM
கரூர், ஜன. 4-
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான, டோக்கன் நேற்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மொத்தமுள்ள, 35 ஆயிரத்து, 323 ரேஷன் கடைகள் மூலம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 2.21 கோடி ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. அதற்காக, குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் குறித்த டோக்கன் நேற்று முதல், வீடு வீடாக சென்று வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்று காலை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான, டோக்கன்களை வழங்கினர்.