வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை திடீரென குறைந்தது
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை திடீரென குறைந்தது
ADDED : ஆக 04, 2026 03:54 AM
கரூர்; வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை குறைந்-துள்ளது.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகா மாநிலம், பெங்களூரு மற்றும் மைசூரு தக்காளியும் தமிழ-கத்துக்கு வர தொடங்கியுள்ளது. இதனால், தக்-காளி விலை குறைந்து வருகிறது.
இதுகுறித்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தின-சரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், தென் மாவட்டங்களின் முக்கிய சந்தை-யாக உள்ள திண்டுக்கல் ஒட்டன் சத்திரம், அய்-யலுார் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்-துள்ளது.
இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு அதிகளவில் தக்காளி கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் கடந்த மாதம், 40 ரூபாய் வரை விற்ற, ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 20 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. சிறிய அளவிலான தக்-காளி, 25 ரூபாயில் இருந்து, 18 ரூபாயாக குறைந்-துள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
