ADDED : ஜூன் 19, 2026 05:44 AM
கரூர்:டாப்செட்கோ சிறப்பு கடன் முகாம் இன்று முதல் நடக்கிறது என, கரூர் கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ)
மூலம், பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனிநபர் கடன் அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை
வழங்கப்படுகிறது.
குழுக்கடன் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு
அதிகபட்சமாக, 1.25 லட்சம் ரூபாய், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக, 25
லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை
மாட்டிற்கு, 60,000 ரூபாய்- வீதம், 2 கறவை மாடுகள் வாங்க கடனுதவி
வழங்கப்படுகிறது.
சான்றிதழ் அவசியம்
மருத்துவம், பல்
மருத்துவம். பொறியியல் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்க, ஒரு
மாணவருக்கு அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கல்வி
கடன் வயது வரம்பு 21 முதல் 40 வரையாகும். இதற்கான சிறப்பு முகாம்
அரவக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்று
(19ம் தேதி) நடக்கிறது.
தோகைமலையில், 22ம் தேதி, க.பரமத்தியில்,
சின்னதாராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 23ம்
தேதி, கரூர் மேட்டு தெருவில் கரூர் நகர கூட்டுறவு வங்கியில், 24ம் தேதி.
கரூர்
பொன்நகரில், தான்தோன்றிமலை வேளாண்மை கூட்டுறவு கடன்
சங்கத்தில், 25ம் தேதி, குளித்தலை காவிரி நகர் கூட்டுறவு வங்கியில்,
25ம் தேதி முகாம் நடக்கிறது.
ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன்
கார்டு, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு
வங்கி கோரும் இதர ஆவணங்களை விண்ணப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு
விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், கல்வி கட்டணங்கள்
செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும்
சமர்பிக்க வேண்டும். இதே நாளில் சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டு கழக (டாம்கோ) கடன் திட்டத்தின் சிறப்பு முகாம் நடக்கிறது.
இத்தகவலை கரூர் கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
