/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் அம்மா பூங்காவில்சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
/
மாயனுார் அம்மா பூங்காவில்சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மாயனுார் அம்மா பூங்காவில்சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மாயனுார் அம்மா பூங்காவில்சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : ஏப் 17, 2025 01:57 AM
கரூர்:கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், மாயனுார் அம்மா பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், பொழுது போக்கு அம்சங்களுக்கு பூங்கா இல்லாத குறையை போக்க, மாயனுார் கதவணை காவிரி ஆற்றின் அருகே, திருக்காம்புலியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 49 லட்சம் மதிப்பில் கடந்த, 2017ல், அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.
பின், கதவணை பகுதியிலிருந்து தார் சாலை வசதி, வண்ண மீன்கள் அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடம், சுற்றுலா பயணிகள் உணவருந்த தனி இடம் என மேலும் வசதிகள் ஏற்படுத்தப்
பட்டன.தினமும் பூங்கா காலை 10:00 மணிக்கு திறந்து மாலை, 6:00 மணிக்கு மூடப்படுகிறது. ஆடி மாதத்தில் பல்வேறு பகுதியிலிருந்து, மாயனுார் செல்லாண்டி அம்மனை வழிபட பக்தர்கள் வருவர். அதேபோல், கோடை விடுமுறையின் போது, கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அப்போது பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தற்போது பல வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.இதனால் பூங்காவை காண தினமும், 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சிறுவர், சிறுமியரின் வருகை அதிகமாக இருப்பதால், பூங்கா களைகட்டி உள்ளது.
பூங்காவை விரிவுப்படுத்தி நல்லமுறையில் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசுக்கு வருமானமும்
கிடைக்கும்.