/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் இழுபறி
/
ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் இழுபறி
ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் இழுபறி
ரயில்வே குகை வழிப்பாதையில் மேற்கூரை அமைப்பதில் இழுபறி
ADDED : நவ 06, 2024 01:23 AM
ரயில்வே குகை வழிப்பாதையில்
மேற்கூரை அமைப்பதில் இழுபறி
கரூர், நவ. 6-
நாட்டில் ரயில்வே கேட்களை, நிரந்தமாக மூடும் வகையிலும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட் பகுதி யில், குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையை, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில் தொழிற்பேட்டை- சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணி சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
அதன் வழியாக, பொதுமக்கள் சணப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், குகை வழிப்பாதையில், இரண்டு பக்கமும் உள்ள விளக்குகள் சரிவர இல்லை. இதனால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதை வழியே செல்வோர் பெரும் அச்சத்துடன் உள்ளனர். மழைநீர் குகைவழிப்
பாதையில் தேங்குவதை தடுக்க, மேற்கூரை அமை க்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. மேற்கூரை அமைக்க இரும்பு துாண்கள் போடப்பட்ட நிலையில், பணி நிறுத்தப்பட்டுள்ளது. குகைவழிப்பாதையில் கூடுதல் மின் விளக்குள் அமைத்து, மேற்கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.