/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் துவக்கம்

ADDED : டிச 05, 2024 07:45 AM
கரூர்: கரூரில் நடந்த, ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
நாடு முழுவதும், 19 ரயில்வே மண்டலங்களுக்கு, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் அங்கீகார தேர்தல் நேற்று தொடங்கி-யது. அதில், டி.ஆர்.இ.யு., - டி.ஆர்.கே. எஸ். - ஆர்.எம்.யு., - எஸ்.ஆர்.இ.எஸ்., - எஸ்.ஆர்.எம்.யு., ஆகிய
ஐந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.கரூரில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், ஒரு
ஓட்டுச்சாவடி ஏற்பாடு செய்-யப்பட்டிருந்தது. அதில், ஊஞ்சலுார் முதல் திருச்சி கோட்டை வரையிலும்,
நாமக்கல்லில் இருந்து கரூர் வரையிலும், கரூரில் இருந்து திண்டுக்கல், குளத்துார் வரை உள்ள ரயில்வே
ஸ்டேஷன்-களில் பணிபுரியும், 832 ஊழியர்கள் ஓட்டு போட உள்ளனர்.முதல் நாளான நேற்று, ஏராளமான ரயில்வே ஊழியர்கள் வரி-சையில், நின்று ஓட்டு போட்டனர். இன்று
இரண்டாவது நாளாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும், 12ல் நடக்கிறது. கரூர் ரயில்வே
ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த, ஓட்-டுப்பதிவையொட்டி, ரயில்வே போலீசார் மற்றும் கரூர் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்.