/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது கார் மோதி வியாபாரி உயிரிழப்பு
/
பைக் மீது கார் மோதி வியாபாரி உயிரிழப்பு
ADDED : அக் 18, 2024 03:07 AM
பைக் மீது கார் மோதி
வியாபாரி உயிரிழப்பு
குளித்தலை, அக். 18-
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பஞ்., தேவஸ்தானத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 66. இவர் வாழைக்காய் வியாபாரம் செய்து வந்தார். குளித்தலை அடுத்த, லாலாபேட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று காலை, 8:00 மணியளவில் தனது ஊருக்கு ஹீரோ பைக்கில் சென்றார்.
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், குளித்தலை பழைய மணல் குவாரி அருகே சென்ற போது, எதிரே திருச்சி உய்யம் கொண்டான் திருமலை ஐந்தாவது வீதியை சேர்ந்த ஹரிஷ் குமரன், 19, என்ற இளைஞர் ஒட்டி வந்த கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்லும் போது, சாலையில் தடுப்பு கம்பியில் மோதி, பின்னர் பைக் மீது மோதியது.
இதில் மாணிக்கம் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். மாணிக்கம் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், ஹரிஷ் குமரன் தனது நண்பர்களுடன் காரில் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்ல, காரை தானே ஓட்டி வந்துள்ளார் என தெரியவந்தது.
இது குறித்து, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.