/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழியில் பஸ் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
/
குழியில் பஸ் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 07, 2024 05:48 AM
அரவக்குறிச்சி: சாலையோரம் தோண்டப்பட்ட குழியில், பஸ் சிக்கிக் கொண்-டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளப்பட்டியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் தமிழ் நகர் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, தோண்டப்பட்ட குழிகளில் மண் சரிவு ஏற்-பட்டுள்ளதால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்-டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நி-லையில், பள்ளப்பட்டியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, தமிழ் நகர் பகுதியில் சாலையோரம் பஸ்சை வளைக்க ஓட்டுனர் முற்-பட்டபோது, மண் சரிவால் ஏற்பட்ட குழியில் பஸ் சிக்கிக் கொண்டது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவிரி கூட்டு குடிநீர் பதிக்கும் பணி, பள்ளப்பட்டி பகுதியில் நிறைவடைந்தாலும், அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.