/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் போக்குவரத்து நெரிசல்: டூவீலர்கள் ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பெரும்பாலான இடங்களில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.கரூர் நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், பழநி உள்பட பல்வேறு நகரங்களுக்கு வெளியூர் பஸ்களும், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், வாங்கல், தென்னிலை, சேமூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் சென்று வருகின்றன.
இங்கு வரும் பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருசக்கர வாகனங்களின் ஆதிக்கம் தினந்தோறும் பெருகிக்கொண்டே வருகிறது. வெளியூர் செல்லும் சில பயணிகள் இருசக்கர வாகனங்கள் மூலம் பஸ் ஸ்டாண்டிகுள் வந்து இறங்குகின்றனர். சில நேரங்களில் வேகமாக வரும் இருசக்கர வாகனகள், பஸ்கள் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை சுற்றி வாகன ஓட்டிகள் தாறு மாறாக தங்களது இருசக்கர வாகனங்களை தினமும் நிறுத்தி வைத்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்ட் வளாகம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. தற்போது கரூர் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் பஸ்களை தவிர இதர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அத்துமீறி நுழையும் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகை மட்டும் வைத்தால் போதாது, உள்ளே வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்.