/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
/
சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 18, 2025 01:47 AM
கரூர், கரூர் மாநகரைச் சுற்றிலும் திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. திருக்காம்புலியூர், வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம், வெங்கமேடு- கரூர் இடையேயும் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முக்கிய மேம்பாலங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சர்வீஸ் சாலைகளில், கனகர வாகனங்கள் அதிக நேரம் நிறுத்தப்படுகிறது. மற்ற வாகனங்கள் சர்வீஸ் சாலைகளில் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. மாநகர பகுதிகளை ஒட்டியுள்ள மேம்பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலைகளில் இதுபோன்ற நிலை தொடர்வதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சர்வீஸ் சாலைகளில் வாகன நிறுத்தத்தை கண்காணித்து, உடனடியாக அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.