/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் வாகனம் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 27, 2025 02:00 AM
கரூர், கரூர் சுற்றியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் நகரை சுற்றிலும், திருச்சி, மதுரை, -சேலம் ஆகிய ஊர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. திருக்காம்புலியூர், வெங்ககல்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முக்கிய மேம்பாலங்களில், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த சர்வீஸ் சாலைகளில், கனரக வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடி-யாத நிலை நிலவி வருகிறது. குறிப்பாக உயர்மட்டம் பாலத்தில் கீழ், சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. சில நேரங்களில் கடும் போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.