தொடர்ந்து தாமதமாக இயக்கப்படுவதால் ரயில் மறியல் போராட்டம்
தொடர்ந்து தாமதமாக இயக்கப்படுவதால் ரயில் மறியல் போராட்டம்
ADDED : மார் 21, 2026 06:38 AM

குளித்தலை; குளித்தலை ரயில் நிலையத்துக்கு, திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் தினமும் தாமதமாக வருவதால், உரிய நேரத்தில் பணிக்கு செல்ல
முடியவில்லை எனக்கூறி, 100க்கும் மேற்-பட்டோர் ரயில் முன் அமர்ந்து மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
கருர் - திருச்சி ரயில் பாதையில், குளித்தலை வழியாக தினந்தோறும், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில், கரூர் டெக்ஸ்டைல்ஸ் ஊழியர்கள், அரசு, தனியார் அலுவலர்கள் மற்றும் கட்டுமான பணிக்கு செல்வோர் என நுாற்றுக்கணக்கானோர், இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஏராள-மானோர் மாதாந்திர பாஸ் எடுத்து ரயிலில் பயணம் செல்கின்றனர்.இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காலை 8:00 மணிக்கு குளித்தலை ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடையும். பின்னர் புறப்பட்டு, 9:00 மணிக்கு கரூர் சென்றடையும். அங்கிருந்து பல்-வேறு அலுவலகல்கள், நிறுவனங்களுக்கு மக்கள் சென்று வந்தனர். இதற்கிடையில் வந்தே பாரத் ரயில் இவ்வழியாக இயக்கப்பட்ட பின்னர், பய-ணிகள் ரயிலின் நேரம் மாற்றப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் கூறியதா-வது:
குளித்தலை ரயில் நிலையத்திற்கு தினமும், 8:00 மணிக்கு வந்த ரயிலானது தற்போது, 8:40 மணிக்கு மேல் வருகிறது. இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தை சென்று அடைவதற்கு முன், இரண்டு, மூன்று இடங்களில் நிறுத்தப்படுவதால், 10:30 மணிக்கு தான் கரூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதனால் அங்கிருந்து நாங்கள் வேலை பார்க்கும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்க-ளுக்கு செல்வதற்கு மிகவும் தாமதமாகிறது. மேலும் சம்பளத்தை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இது குறித்து, பலமுறை ரயில்வே அதிகாரிகளிடம், மனு அளித்தும் பலனில்லை. இதனால்தான் ரயில் மறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு கூறினர்.
குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் போராட்-டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து மனுவாக அளியுங்கள்; ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிய-ளித்தார். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்-டவர்கள் கலைந்து சென்றனர். 25 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த ரயில் மறியல் போராட்டத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
