ADDED : அக் 12, 2026 05:59 AM
கரூர்,:கரூர்,
தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், தேர்தல் கல்வி அறிவுக்குழு
ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. இதில், டி.ஆர்.ஓ.,
விமல்ராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகள்,
கல்லுாரிகள், தனியார் பள்ளி கல்லுாரிகளில் தேர்தல் கல்விஅறிவு
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லுாரி மற்றும்
பள்ளிகளுக்கு, தலா, ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.தேர்தல் கல்விஅறிவு குழுக்களுக்கு
நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின்
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை
நடைமுறைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் இளம் வாக்காளர்கள்
மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு
ஏற்படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
