/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : மார் 25, 2024 07:03 AM
கரூர் : கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. இதில், உதவி தேர்தல் அலுவலர் முகமதுபைசல் தலைமை வகித்து பேசியதாவது:தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.
ஓட்டுச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தினை அனைவரும் பார்த்து உங்கள் பணி குறித்து மேலும், அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

