முதியோர் தபால் ஓட்டு தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
முதியோர் தபால் ஓட்டு தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 14, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
கரூர் : கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், முதியோர் தபால் ஓட்டு பதிவு செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு தொடர்பாக, இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டு செலுத்தும் போது அவர்களின் உரிமைகள் மற்றும் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள், தொகுதி மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.
