ADDED : மார் 29, 2026 02:50 AM
குளித்தலை :குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலரும், குளித்தலை சப்-கலெக்டருமான சுவாதிஸ்ரீ தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இந்துமதி, சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், தேர்தல் தாசில்தார் ஜெயவேல் காந்தன் மற்றும் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியை, டி.ஆர்.ஓ..விமல்ராஜ் பார்வையிட்டு, எப்படி பணியாற்ற வேண்டுமென செயல்முறை விளக்கம் அளித்தார். தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக நடத்த வேண்டும், முக்கியமாக இவிஎம் இயந்திரங்களை இயக்குதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடிக்குள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஓட்டுப்பதிவு செயல்முறை போன்ற விளக்கங்கள் டிஜிட்டல் திரை மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
