ADDED : டிச 20, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில், செபி குறித்து ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
கல்லுாரி வணிகவியல் துறை விரிவுரையாளர் அருண்குமார் வரவேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்து பேசினார். வணிகவியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதில், செபியின் முதலீட்டு பாதுகாப்பு பயிற்சியாளர் மோகன்குமார் சிறப்புரையாற்றி, முதலீட்டு பாதுகாப்பு, நிதி அறிவு மற்றும் முதலீட்டாளர்களின் உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
பயிற்சி பட்டறையில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி நாகலட்சுமி நன்றி கூறினார்.

