ADDED : ஜூலை 02, 2024 07:41 AM
கரூர்: அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில், 11 பேர் பணியிட மாற்றம் பெற்-றனர்.
கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு நடுநிலை, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நேற்று நடந்-தது. மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன் செட்டி முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. நடப்பு கல்வியாண்டில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்-கலாம் என கல்வித்துறை அறிவித்து இருந்தது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்தது. அதில், 18 பேர் விண்ணப்பித்த நிலையில், 17 தலைமை ஆசிரியர் பங்கேற்றனர். இவர்களில், 11 பேருக்கு ஒன்றிய அளவில் பணியிடை மாற்றம் வழங்கப்பட்டது.
இன்று தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடக்கிறது.