தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம்


ADDED : ஜூலை 27, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டம், நெரூர் அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.

மேலும், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானமும் உள்ளது. சாலையோரத்தில் மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மின் டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்கள் சேதமடைந்த நிலையில், எந்நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், சேதமடைந்துள்ள மின் டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்கள் மாற்றப்படவில்லை.இதனால், சேதமடைந்த நிலையில் உள்ள, மின்சார டிரான்ஸ்பார்மரால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரூர் அருகே அக்ரஹாரம் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள, மின்சார டிரான்ஸ்பார்மர் சிமென்ட் துாண்களை மாற்ற, கரூர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us