ADDED : ஏப் 14, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, சிறுநீர் கழிக்க சென்ற டிரைவரை தாக்கியதாக, நான்கு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ராவந்தானுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 39; இவர் கடந்த, 11 இரவு கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில், வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது, கரூரை சேர்ந்த தீப்சி, 27, அனிதா, 25, சஞ்சனா, 20, ராகவி, 29, ஆகிய நான்கு திருநங்கைகள் ஒன்று சேர்ந்துகொண்டு, டிரைவர் சங்கரை தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து, டிரைவர் சங்கர் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் தீப்சி உள்பட, நான்கு திருநங்கைகளை கைது செய்தனர்.

