ADDED : ஆக 29, 2026 07:07 AM
கரூர்:கரூர்
திருமாநிலையூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல
அலுவலகம் முன், ஏ.ஐ.டி.,யு.சி., தொழிலாளர் சங்கம் சார்பில்
வாயிற்கூட்டம் நடந்தது.
மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில், பணியாளர்கள்
நியமனத்தை கைவிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
வேண்டும். போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க
தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், 15-வது ஊதிய
ஒப்பந்தப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அனைத்து
தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
கூட்டத்தில், சங்க பொதுச்செயலர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல், துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
