/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்
/
மரக்கிளை ஒயரில் உரசி கோவிலில் அபாய சத்தம்
ADDED : ஜூலை 14, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த ரங்கநாத புரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர்,
30 ஆண்டாக, 'வாட்ச்மேன்' ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நி-லையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணியளவில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய ஒலி எழுப்பும் இயந்தி-ரத்தில் சத்தம் எழுந்துள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலு-வலர் ராதிகா கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசா-ரணை நடத்தினர். அதில், மரக்கிளை மின் ஒயர் மீது பட்டு, அபாய ஒலி எழுப்பும் இயந்திரத்தில் சத்தம் எழுந்தது தெரியவந்-தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.