ADDED : நவ 28, 2026 08:02 AM
கிருஷ்ணராயபுரம்:பாலப்பட்டி சாலை பகுதியில், மரக்கன்றுகள் நடுவதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் அமைக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து பாலப்பட்டி பகுதியில் இருந்து
மேட்டுப்பட்டி பிரிவு வரை, தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக
ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். சாலையோரத்தில் வளர்ந்த
முள் செடிகள், கடந்த வாரம், பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் வெட்டி
அகற்றப்பட்டது. தற்போது, சாலையோரத்தில் நிழல் தரும் மரங்கள்
நடுவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, பஞ்சாயத்தில்
உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு பாலப்பட்டி,
மேட்டுப்பட்டி சாலையோர பகுதிகளில், மரக்கன்றுகள் நடுவதற்காக
குழிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை, பஞ்சாயத்து
நிர்வாகம் சார்பில்
மேற்பார்வையிடப்பட்டது.
