/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா
/
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா
ADDED : நவ 27, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே மணவாடியில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மரம் நடும் விழா நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் தலைமை வகித்தார். மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், 45 மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அனுராதா செய்திருந்தார்.

