/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி
/
நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி
ADDED : டிச 21, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: நல்லுார் பஞ்சாயத்து பகுதியில், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.குளித்தலை அடுத்த நல்லுார், கலிங்கப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மரக்-கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
இந்த பணியில், 100 நாள் திட்ட பணியாளர்கள் கொடுக்-காபுளி, புங்கை, மகாகனி ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்று நடும் பணியை பஞ்சாயத்து செயலாளர் மதியழகன் பார்வையிட்டார். மேலும்,மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாத வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

