ADDED : மார் 10, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள, மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து லாலாப்-பேட்டை பழைய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல், சிந்தல-வாடி மாரியமமன் கோவில் பிரிவு சாலை வரை, பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வேம்பு, பூவ-ரசு, புங்கன், ஈட்டி, புளியமரம் உள்பட பல வகையான மரக்கன்-றுகள், சாலையின் இருபுறமும் நடப்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால், நடப்பட்ட மரக்கன்றுகள் காய்ந்து வரும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், பஞ்சா-யத்து சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.
