ADDED : ஜூன் 20, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:வல்லம் கிராம சாலையில், மரக்கன்று பராமரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து, வல்லம் கிராமத்தில் மாரியம்மன்
கோவில் சாலை, பகவதியம்மன் கோவில் சாலை ஆகிய இடங்களில், சாலையின்
இருபுறமும் வேம்பு, ஈட்டி, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இதை
சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது காற்றின் காரணமாக அவை
சரிந்துள்ளன.
இதையடுத்து, பஞ்சாயத்து சார்பில் நுாறு நாள் திட்ட
தொழிலாளர்களை கொண்டு மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு அமைத்தல் மற்றும்
செடிகள் வளர்ச்சிக்கு தண்ணீர் ஊற்றும் பணிகள் நடந்தன.
