ADDED : ஜூன் 05, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:சின்னசேங்கல் சாலையோர இடங்களில், மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த, சின்னசேங்கல் சாலையோர பகுதிகளில் பல வகையான நிழல்
தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதை சுற்றி தடுப்பு வேலி
அமைக்கப்பட்டது. வெயில் காலத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து வரும்
வகையில், தண்ணீர் ஊற்றப்பட்டது. இப்பணியில், பஞ்சாயத்தில் உள்ள 100
நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
