/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்சி - பாலக்காடு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
/
திருச்சி - பாலக்காடு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
திருச்சி - பாலக்காடு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
திருச்சி - பாலக்காடு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
ADDED : ஆக 15, 2024 07:34 AM
கரூர்: கரூர் வழியாக இயக்கப்படும், திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல், (ஆக., 16) 10 நாட்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருகூர்-கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கரூர் வழியாக திருச்சி-பாலக்காடு ரயில் (எண்-16843) நாளை மற்றும், 17, 18, 19, 23, 24, 25, 26, 30, 31 ஆகிய, 10 நாட்களுக்கு மட்டும் இருகூர்-போத்தனுார் வழியாக இயக்கப்படும். இதனால், மேற்கண்ட தேதிகளில் சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.