தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நேரம் நாளை முதல் மாற்றம்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நேரம் நாளை முதல் மாற்றம்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நேரம் நாளை முதல் மாற்றம்


ADDED : அக் 27, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நேரம் நாளை முதல் மாற்றம்

கரூர், அக். 27-

கரூர் வழியாக செல்லும், திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நேரம் நாளை முதல், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சியில் இருந்து, கரூர் வழியாக ஈரோட்டுக்கு நாள்தோறும் பயணிகள் ரயில் (எண்-06611) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் புறப்படும் நேரம், நாளை முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில் இருந்து காலை, 7:00 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், நாளை முதல் காலை, 7:20 மணிக்கு புறப்படும். குளித்தலைக்கு, 8:17 மணிக்கும், லாலாப் பேட்டை க்கு, 8:29 மணிக்கும், மாயனுாரு க்கு, 8:49 மணிக்கும், கரூருக்கு, 9:12 மணிக்கும், புகழூருக்கு, 9:34 மணிக் கும், ஈரோடுக்கு, 10:25 மணிக்கு செல்லும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us