ADDED : மார் 02, 2026 09:07 AM
குளித்தலை: குளித்தலை, காவேரி நகர் அண்ணா திருமண மண்டபத்தில், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதி த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது.
கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள், திருச்சி மண்டல வழக்கறிஞர் சங்க இணை ஒருங்கிணைப்பாளர் அமானுல்லா, சந்தோஷ்குமார், தமிழழகன், சித்தார்த், விஜய், மாவட்ட துணை செயலாளர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளரும், காவிரி டெல்டா பகுதி பொறுப்பாளருமான கிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, கிருஷ்ணாராயபுரம் தொகுதிகளில், த.வெ.க., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வாக்காளர்களிடையே பிரசாரம் மேற்கொண்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்,'' என்றார். கருர் கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

