ADDED : அக் 07, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள உயர்மின் கோபுர விளக்குகள் பழுதால், வெளிச்சம் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் எரியும்போது, பஸ் ஸ்டாப், கடைவீதி மற்றும் அருகில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் வெளிச்சமாக இருக்கும்.
சாலைகளில் சிரமம் இன்றி மக்கள் சென்று வந்தனர். சில நாட்களாக விளக்குகள் பழுது ஏற்பட்டு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாப், கடைவீதி பகுதிகளில் போதிய வெளிச்சம் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பழுது அடைந்துள்ள விளக்கு களை எரிய வைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.