/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிற்பேட்டை துணை மின்நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தவிப்பு
/
தொழிற்பேட்டை துணை மின்நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தவிப்பு
தொழிற்பேட்டை துணை மின்நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தவிப்பு
தொழிற்பேட்டை துணை மின்நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தவிப்பு
ADDED : டிச 22, 2024 01:16 AM
கரூர், டிச. 22-
கரூர், தொழிற்பேட்டை துணை மின்நிலையம் முன் சாலையோரம் குடிநீர் குழாய் உடைப்பால், மின் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பசுபதிபாளையத்தில் உள்ள தொழிற்பேட்டை வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், டாஸ்மாக் ஆகிய குடோன்கள் இயங்கி வருகின்றன. மேலும், கொசுவலை, ஜவுளி நிறுவனங்கள் உள்பட பல தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு, துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் சாலையோரம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மின் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கட்டளை காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் சுற்றியுள்ள பல்வேறு ஊர்க-ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், தொழிற்பேட்டை துணை மின்நிலையம் முன் உள்ள சாலையில், காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
தற்போது, கட்டளை காவிரி நீரேற்று நிலையத்தில் குழாய் அடித்து செல்லப்பட்டதால், தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குழாயில் தண்ணீர் வரத்து இல்லாத போது, ஏற்கனவே வெளியேறிய தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், துணை மின்நிலையத்தில் பராமரிப்பு மேற்கொள்ளும் ஊழியர்கள், மிகவும் சிரமப்பட்டு பணிகளை செய்து வருகின்றனர். கடந்த, 10 நாட்
களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நீர் வரத்து இல்லாததால், உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.