/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதி
/
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதி
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதி
சிறுபாலம் இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களால் அவதி
ADDED : டிச 19, 2024 01:06 AM
கரூர், டிச. 19-
கரூர்-வெள்ளியணை சாலை முத்துலாம்பட்டி பிரிவு சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டது. அப்போது, கான்கிரீட் அமைக்க இரும்பு கம்பிகள் போடப்பட்டன. மேலும், இணைப்பு சாலையில் போடப்பட்ட தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, கரூர்-வெள்ளியணை சாலை முத்துலாடம்பட்டி பிரிவில், சாலையின் குறுக்கே உள்ள, சிறு பாலத்தில், சிதறி உள்ள சிமென்ட் ஜல்லிக்கற்களை சீரமைத்து, தார் சாலை அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுக்க வேண்டும்.