/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்றுநீரால் அவதி
/
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்றுநீரால் அவதி
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்றுநீரால் அவதி
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்றுநீரால் அவதி
ADDED : டிச 26, 2024 01:44 AM
கரூர், டிச. 26-
கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில், ஊற்றுநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
நாட்டில் ரயில்வே கேட்களை, நிரந்தமாக மூடும் வகையிலும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட் பகுதியில், குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், இந்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில், தொழிற்
பேட்டை-சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.
தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 25 அடி பள்ளத்தில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 24 மணி நேரமும் ஊற்று நீர் வெளியேறி, குகை வழிப்பாலத்தில் தேங்கியுள்ளது. அதன் வழியாக, பொதுமக்கள் சணப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், ஊற்றுநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். குகை வழிப்பாலத்தில் தேங்கியுள்ள ஊற்றுநீரை, மின் மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குகை வழிப் பாதையில், இரண்டு பக்கமும் உள்ள விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதையாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர்அச்சத்துடன் உள்ளனர். குகை வழிப்பாதை சுவர்களில், ஆங்காங்கே சிமென்ட் கலவை உதிர்வதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில் உள்ள குறைகளை உடனடியாக கவனித்து, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.