பெண்ணிடம் சீண்டல் த.வெ.க., நிர்வாகிக்கு தர்ம அடி
பெண்ணிடம் சீண்டல் த.வெ.க., நிர்வாகிக்கு தர்ம அடி
ADDED : ஜூலை 14, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரை சேர்ந்தவர், 25 வயது பெண்; திருமணமாகிவிட்டது. இவர், மெடிக்கலில் பணிபுரிகிறார்.
நேற்று இரவு, 7:00 மணிக்கு பணி முடிந்து, டூ - வீலரில், தோழியுடன் சென்றபோது, கிழக்கு ஒன்றிய, த.வெ.க., செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
