/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள்; ஜல்லியால் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள்; ஜல்லியால் வாகன ஓட்டிகள் தவிப்பு
தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள்; ஜல்லியால் வாகன ஓட்டிகள் தவிப்பு
தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகள்; ஜல்லியால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மே 03, 2024 07:17 AM
கரூர் : தார் பாய் போட்டு மூடாமல் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளால், விபத்தில் சிக்கி கொள்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, க.பரமத்தி சுற்று வட்டார பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கிரஷர் மற்றும் கல்குவாரிகள் உள்ளன. இப்பகுதியில் கல்குவாரிகளில் இருந்து வெடி வைத்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கிரஷர் மூலம் அரைக்கப்பட்டு அரை, முக்கால், ஒன்றரை, சிப்ஸ் மற்றும், எம் சாண்ட் என, பல வகைகளில் பிரித்து தயாரிக்கப்படுகிறது.
இங்கு, தயாரிக்கப்படும் கிரஷர் ஜல்லி கற்களை கிழக்கு மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீடு, கடைகள் கட்டுமான பணி, தார்சாலை அமைக்கவும் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு லாரிகளில் பாரம் ஏற்றி செல்லும் போது, தார்பாய் கொண்டு மூடி செல்லாமல் அப்படியே செல்கின்றனர். இதனால் லாரி வேகமாக செல்லும் போது ஜல்லி கற்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறிய படி செல்கிறது.
இதனால் பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்களில் விழுந்து கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் நெடுஞ்சாலையில் சிதறிய படி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் கண்காணித்து, மேற்படி லாரிகளில் தார் பாய் கொண்டு மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.