/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் விற்பனை கூடம் மஞ்சள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
க.பரமத்தியில் விற்பனை கூடம் மஞ்சள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
க.பரமத்தியில் விற்பனை கூடம் மஞ்சள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
க.பரமத்தியில் விற்பனை கூடம் மஞ்சள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 04, 2024 11:11 AM
கரூர்: மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க, க.பரமத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட அமராவதி பாசனப்
பகுதியில் உள்ள சின்னம்மநாயக்கனுார், ராஜபுரம், நம்பகவுண்டனுார், தொக்குப்பட்டி, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி நடக்கிறது. ஓராண்டு பயிரான மஞ்சளை பொதுவாக ஆடி மாதம் விவசாயிகள் நட்டு, 11-வது மாதத்தில் அறுவடை செய்கின்றனர். நாட்டு மஞ்சள் என்னும் விரலி மஞ்சள், ஹைப்பிரிட் மஞ்சள் வகைகள் பயிரிடப்படுகின்றன.
இங்கு அறுவடையாகும் மஞ்சளை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். அங்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பதால் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, க.பரமத்தியில் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஈரோடு, கள்ளக்குறிச்சி பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டாலும், பெரும்பாலான விவசாயிகள் போதிய லாபம் இல்லை எனக்கூறி கரும்பு, வாழை சாகுபடிக்கு மாறிவிட்டனர். இதனால், கரூர் மாவட்டத்தில் சாகுபடி அதிகரித்து வருகிறது. இங்கு விளையும் மஞ்சளை ஈரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்தில் விற்கிறோம். அங்கு இடைத்தரகர்கள் தலையீட்டால், போதிய வருவாய் கிடைக்காமல் அவதியுறுகிறோம். எனவே கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஈரோட்டில் உள்ளது போல, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் மஞ்சளை கொள்முதல் செய்தால் உரிய விலை கிடைக்கும். இவ்வாறு கூறினர்.