ADDED : ஏப் 29, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, தமிழக வாழ்வுரிமை கட்சியின், மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் க.பரமத்தியில் நடந்தது.
அதில் வரும், 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தலைவர் இளமாறன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன், இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் சிவக்குமார், செயலாளர் ஜெகநாதன், மகளிர் அணி செயலாளர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.